×

கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!!

கேரளா: கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதற்கு இரண்டு தினத்திற்கு முன்பு வயநாட்டில் உள்ள கம்பம் மலைப்பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் தமிழர்கள் வாழும் பகுதி கிராமத்திற்கு வந்து ஓட்டளிப்பதனால் எந்த பிரயோஜனம் இல்லை என்று மக்களிடையே ஒரு பிரச்சாரத்தில் செய்துவிட்டு கம்பம் மலைப்பகுதி வனத்திற்குள் சென்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாருக்கும், தீவிரவாத தடுப்பு பிரிவான தண்டர் போல்ட் போலீசாருக்கும் தகவல் கொடுத்ததிலிருந்து தீவிர பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த 26ம் தேதி நடந்த வாக்குபதிவின் போதும் தீவிரவாதியினால் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் வயநாட்டில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து கடந்த 2, 3 தினங்களாக வந்த தீவிரவாதிகள் யார் யார் என்பது குறித்துவனத்தினுள் புகுந்து தண்டர் போல்ட் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தண்டர் போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இன்று 9 ரவுண்டு துப்பாக்கி சூடு நடைபெற்றதாக அந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய தீவிரவாத செயலில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கு ஹெலிகாப்டர் உதவியோடும் தேடும் பணியில் ஈடுபடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala's Wayanad ,Maoists ,Task Force ,Tamils ,Kerala ,Kambam Hill ,Wayanad ,Wayanad, Kerala State ,
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை